சுற்றாடலை அனர்த்த அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்...... கலாபூசணம் பீ.ஏ.அந்தோனி மார்க்
சுற்றாடலை அனர்த்த அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.
உலக சுற்றாடல் தினம் -ஜீன் 5
(கலாபூசணம் பீ.ஏ.அந்தோனி மார்க்)
சுற்றாடலை சரியாக பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளமுடியும். ஆனாலும் சுற்றாடலை நாம் சரியாக பாதுகாக்க முடியாமையினால் அண்மையில் வெள்ளம்ää மண்சரிவு வரட்சி மீதோட்ட மூலை குப்பை மேட்டுச்சரிவு வெள்ளவத்தை மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தமை போன்றவை முக்கியமான சுற்றாடல் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது.
200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை. இவர்கள் இடிபாட்டுக்குள் அகப்பட்டு இறந்திருக்க கூடுமென அறிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்கள். பல விதமான நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்ற இவ்வருட சுற்றாடல் தினத்திற்கான தொனிப்பொருள் “இயற்கையோடு இணைந்த மக்கள்” என்பதாகும்.
இலங்கை அரசாங்க அமைச்சரவை தீர்மானத்திற்கமைவாக மே 29ம் திகதி தொடக்கம் யூன் 4ந்திகதி வரை தேசிய சுற்றாடல் வாரம் கொண்டாடப்படுகிறது. பெரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை பாடசாலைகள் மற்றும் சுற்றாடல் சார்ந்த குழுக்களுடன் இணைந்து பல்வேறு தெளிவுபடுத்தும் செயலமர்வுகளை செயற்படுத்தி வருகின்றது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பிரதேச சபைகள்ää நகரசபைகள்ää அரச திணைக்களங்கள் பல்வேறு மட்டத்தில் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் அத்துடன் நேரடியாக மரம் நடுகை நகர கிராமங்களை சுத்திகரித்தல் கூளங்களை சேர்த்து அப்புறப்படுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வகின்றனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை
தற்போது 3000 பாடசாலைகளில் சுற்றாடல் முன்னெடுப்பாளர்கள் 4000 பேருக்கு அதிகமாக உள்ளனர். இவர்கள் பாரிய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வீடுகளில் குப்பை சேர்வதை குறைத்தல் மற்றும் கிராமங்களில் மக்களுக்கு அறிவ10ட்டல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். எதிர்காலத்தில் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி விரைவில் நாட்டில் 4000 பாடசாலைகளில் சுற்றாடல் முன்னெடுப்பாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் சுற்றாடலை பாதுகாக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் இறுதி எதிர்பார்ப்பின் படி எமது நாட்டில் சுற்றாடல் முன்னெடுப்பாளர்கள் 1லெட்சம் பேரை உருவாக்குதலாகும். 2020ம் ஆண்டளவில் எமது நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் முன்னெடுப்பாளர்கள் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு விலங்குளின் பாதுகாப்பு போன்றவற்றிற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் சபை அறிவித்துள்ளது.
குப்பை கூளங்கள் (கழிவுகள்)
நாட்டில் கிராமங்களிலும் நகரசபை பகுதிகளிலும் பல இடங்களில் குப்பை கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன. இவை பலவிதமாக நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கவனமெடுத்து விசேடமாக உள்ளுர் ஆட்சி மன்றங்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவதுடன் குப்பைக்கழிவுகளை சேர்த்து அதன்மூலம் கொம்போஸ்ட் உர உற்பத்திகளை செய்வதற்காக கொம்போஸ்ட் உர உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் இவ்வாண்டு சூழலியல் வழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தில் சுவாசிக்கும் காற்று ஏன் நஞ்சாக இருக்கின்றது. குடிக்க ஏன் தண்ணீர் இல்லை ஏன் மழை இல்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. ஏனென்றால் இப்போது நாம் சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. வளி மற்றும் நீர் மாசடைதல் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் கல்விமான்கள் சர்வகலாசாலை மாணவர்கள் போன்றோரை உள்வாங்கி தேசிய அரசியல் நிகழ்ச்சி திட்டங்கள் மூலம் பாரிய வழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
இதுதான் நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பாரிய சவால்களாகும்.
எண்ணெய் கசிவு சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அனுசக்தி நிலையங்கள் திட்டமிடப்படாத கழிவு அகற்றல் நச்சு வாயுக்களின் வெளியேற்றம் வீதி கட்டுமானம் காடழிப்பு காடுகளுக்கு நெருப்பு வைத்தல். வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகைகள் இரசாயன உரமூலம் பூமியின் அடியில் நிலத்தடி நீர் மாசடைதல் போன்றன நீரையும் காற்றையும் மாசுபடுத்துகின்றன.
கைத்தொழில் தொழிற்சாலைக்கழிவுகள் கழிவகற்றல் வடிகால்களை ஆறுகளுடன் இணைக்கப்படுதல் வீதி ஓரங்களில் கரையோரங்களில் வீசப்படும் கழிவுப்பொருட்கள் என்பனவும் சூழலுக்கு ஆபத்தானவையே மேற்படி நச்சு வாயுக்களால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டு வரும் துவாரங்கள் மூலம் பூமி வெப்பமடைதலை அதிகரிக்கச் செய்து அந்த வெப்பத்தின் மூலம் மனித உயிர்களும் பிராணிகளும் சிறு தாவரங்களும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இவற்றில் இருந்து விடுதலை பெற கிராமங்கள் தோறும் மரநடுகை ஊக்குவிக்க வேண்டும். வீட்டுத்தோட்டங்களை உருவாக்கவேண்டும். பனை-தென்னை-மா-பலா போன்ற மரங்களை நடவேண்டும். காடுகளை வளர்க்கவேண்டும். பெற்றோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களை மாற்றீடு செய்து சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்களையும் மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பாவிக்கவேண்டும்.
மனிதர் மற்றும் விலங்குகளின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை உணவு வழங்குகின்றது. இந்த உணவு தாவரத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கப்பெறும் சக்தியை ஒளித்தொகுப்பின் ஊடாக புவிக்குப் பயனுள்ள விதத்தில் பெற்றுத்தரும் பணியினைத் தாவரங்கள் செவ்வனவே ஆற்றி வருகின்றன. இந்த ஒளித்தொகுப்பு நிகழ்கையில் அசுத்த வாய்வுகளைக்கொண்ட காபனீர்ஒட்சைட் நுகரப்பட்டு உயிரினங்களின் சுவாசத்திற்கு தேவையான ஒட்சிசனை வெளியிடுகின்றது. இந்த ஒட்சிசனை சுவாசித்து மனித இனம் உயிர் வாழ்கிறது.
மன்னார் மாவட்டத்தில் டைனமைட் பாவித்து பெருவாரியான மீன்களை ஒரே நேரத்தில் பிடிக்கின்றார்கள். இதனால் கடல் வளம் அழிக்கப்பட்டு மீனவர் வாழ்க்கை பாதிப்படைகின்றது. நாட்டின் அபிவிருத்தி அதிகரிக்கும் பொழுது சூழல் பாதுகாப்பை சமப்படுத்தவேண்டும். மாவட்டங்களுக்கு தேவையான தந்திரோபாயங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். சுற்றாடலை பாதுகாக்கவென பல சட்டங்கள் உண்டு. சுற்றாடலை நாசப்படுத்தி தமது வீட்டிலும் வளவிலும் மலேரியாää டெங்கு போன்ற நோய்களை உற்பத்தியாக்கினால் ரூபா 25000/- 50000/-தெண்டம் அடிக்கப்படுகின்றன. 1978 ம் ஆண்டு இலங்கை அரசியல் யாப்பின் 27(4) சரத்து 28(வி) சரத்துக்களின்படி சுற்றாடலை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
இதற்கு மேலதிகமாக 1980 ஆண்டு 47ம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் அதிகாரங்களும் வழங்கப்படடுள்ளன. இதற்கு அடுத்ததாக மாகாண சுற்றாடல் அதிகார சபை சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக மாகாண சுற்றாடல் அதிகார சபையும் வேறு சில உள்ளுர் அமைப்புக்களுக்கும் சற்றாடலை பாதுகாக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடி தொழிலுக்கும் பாதுகாப்புச்சட்டங்கள் உண்டு..
மேலும் சூழல் மாசடைய செய்வதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் உலக சனத்தொகை பெருக்கமாகும். சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடியிருப்புக்காக காடுகள் வெட்டி காணியை பயன்படுத்துகிறார்கள் வீட்டுத்திட்டங்கள் நீர் பாசனத்திட்டங்கள்ää தொழிற்சாலைகள்கை த்தொழில் பேட்டைகள் போன்றன உருவாக்கமும் சூழல் பாதிப்பிற்கு பாரிய காரணிகளாக உள்ளன.
ஐ.நா சுற்றாடல் திட்டம் .UN environmental Program (UNEP) சுற்றாடலை பாதுகாப்பதற்காக ஐ.நா சுற்றாடல் திட்டம் ஒன்று 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுற்றாடல் பாதுகாப்பு முயற்சிகளுக்காக தலைமைத்துவத்தை வழங்கி கூட்டு முயற்சியை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். வருங்கால சந்ததியினருக்கு இழப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவியளிக்கிறது. சுற்றாடல் துறையில் இதுவே ஐ.நா சபையின் பலம் கொண்ட பிரதான அமைப்பாகும்.
இதன் கடமைகள் :-
1. உலகளாவிய சுற்றாடல் நெறிமுறைகளை வகுத்தல்.
2. ஐ.நா சபைக்குள் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முயற்சிகளில் சுற்றாடல் பாதுகாப்பு விடயங்களை கவனித்தல்.
3. உலக சுற்றாடல் பாதுகாப்புக்காக பரிந்துரை செய்தல். நிகழ்ச்சி திட்டத்திற்கான நிதியானது சுற்றாடல் நிதியம் - நன்கொடைகள்ää நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகின்றன.
4. ஐ.நா வழமையான வரவு செலவு திட்டத்தில் இருந்து ஒரு சிறுதொகை ஒதுக்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் தமது வீடுகள்ää வளவுää பயிர் செய்யும் இடங்களை சரியான முறையில் பாதுகாத்தால் அனர்த்தங்களில் இருந்து விடுதலை பெறமுடியும்.
சுற்றாடலை அனர்த்த அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்...... கலாபூசணம் பீ.ஏ.அந்தோனி மார்க்
Reviewed by Author
on
June 05, 2017
Rating:

No comments:
Post a Comment