மடுத்திருப்பதி ஆடிமாத பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்....
மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலமான மடுத்திருப்பதியின் ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (23.06.2017) பிற்பகல் மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் கலந்துகொள்ள பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 9 தினங்களுக்கு மாலையில் திருச்செபமாலையுடன் நவநாட்களும் யூலை மாதம் இரண்டாம் திகதி ஆயர்கள் கலந்து கொண்டு பெருவிழா திருப்பலியையும் ஒப்புக்கொடுப்பர்.
வழமையாக இவ் விழாவில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வதால் இம்முறையும் இவ்வாறு அமையும் என மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து 9 தினங்களுக்கு மாலையில் திருச்செபமாலையுடன் நவநாட்களும் யூலை மாதம் இரண்டாம் திகதி ஆயர்கள் கலந்து கொண்டு பெருவிழா திருப்பலியையும் ஒப்புக்கொடுப்பர்.
வழமையாக இவ் விழாவில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வதால் இம்முறையும் இவ்வாறு அமையும் என மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
மடுத்திருப்பதி ஆடிமாத பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்....
Reviewed by Author
on
June 26, 2017
Rating:

No comments:
Post a Comment