சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம்: இலஞ்சம் புரண்டது?
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான விடயத்தை அடக்கி வாசிக்க அல்லது மூடி மறைக்க தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் பெருந்தொகை இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.தனது பெயரை வெளியிட விரும்பாத குறித்த நிறுவனத்தினில் இணைந்து பணியாற்றியிருந்த இலங்கை மின்சாரசபையின் மூத்த அதிகாரியொருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தினில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினில் மின்சாரத்தை உற்பத்தி செய்து எமக்கு வழங்கிய நொதேர்ண் பவர் நிறுவனம் அனைத்து நிதி கையாளல்களையும் சிங்கப்பூரினில் மேற்கொண்டுவந்திருந்தது.பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் அமைச்சருமாக இருந்த பஸில் ராஜபக்ச அதில் பங்கெடுத்திருந்தார்.

எனினும் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்தமை தொடர்பான விடயம் சர்ச்சைகளினை தோற்றுவித்திருந்த நிலையினில் உள்ளுரினில் பேரம் பேசல்களை முன்னெடுக்க நிர்வாகம் முன்வந்தது.அவ்வகையினில் தமிழ் அரசியல் தரப்பினை சேர்ந்தவர்களும்; கையாளப்பட்டதை தாம் அறிந்திருந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
வடமாகாணசபையினில் அமைச்சர்; மட்டத்தினில் நடந்தது அனைத்து மட்டங்களிலும் அம்பலமாகியுள்ளது.அதிலும் போலியான அறிக்கை தயாரிக்கப்பட்டு நொதேர்ண் பவர் நிறுவனத்தை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெளிப்பட்டுவிட்டன.அவற்றின் மொத்த அறுவடையாக அமைச்சர் பதவியிழக்க வேண்டியேற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே விடயத்தை அமுக்கிவைக்க அல்லது கண்டுகொள்ளாதிருக்க சில அரசியல்வாதிகள் பணம் பெற்றனரென தெரிவித்த அவர் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஒருவரும் அதனுள் உள்ளடங்கியிருந்ததை தான் அறிந்திருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.அந்நபர் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினரொருவரது செயலாளராக இருந்ததால் அந்நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இந்நிதி கைமாறல்களினில் தொடர்பிருந்ததா என்பது தனக்கு தெரியாதெனவும் தெரிவித்தார்.
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான விடயத்தை வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் நுகர்வுக்கு உகந்தது அல்ல எனவும் இந்ந விடயத்தில் கையூட்டுப் பெறப்பட்டுள்ளதா என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை விசாரிக்கும் படியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையினில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்டால் அனைவரும் அம்பலத்திற்கு வருவார்களென மேலும் அவர் தெரிவித்தார்.
எனினும் இப்போது கைது வரை நீதிமன்ற உத்தரவு சென்றிருக்கின்றது.அதனை தவிர்க்க கடைசிவரை அவர்கள் போராடினார்கள்.இனியும் போராடுவார்கள். கடந்த காலங்களினில் பல தரப்பினரையும் அழுத்தங்கள் மிரட்டல்கள் மூலம் பணிய வைத்தனர் இன்னம் சிலரை பணத்தின் மூலம் மடக்கினர். அதனை அவர்கள் தொடர்வார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Reviewed by NEWMANNAR
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment