விசாரணைக்குழுவில் முன்னிலையாகமாட்டோம் – டெனீஸ்வரன், சத்தியலிங்கம்!
- வடக்கு மாகாணத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் விசாரணை செய்வதற்கு வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு முன் தாம் முன்னிலையாகமாட்டோமென இரண்டு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும். விசாரணைக் குழு அமைப்பதற்கான அதிகாரம் வடமாகாண முதலமைச்சருக்கு இல்லையெனவும், அதற்கான அதிகாரம் மாகாண செயற்குழுவுக்கே உள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர்கள் தாம் இவ்விசாரணைக் குழு முன்னிலையில் முன்னிலையாகப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரின் அமைச்சுகளிலும் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இவ் அமைச்சர்கள், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது பெற்றுக்கொண்ட நிதி குறித்தும் பதிலளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணைக்குழுவில் முன்னிலையாகமாட்டோம் – டெனீஸ்வரன், சத்தியலிங்கம்!
Reviewed by NEWMANNAR
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment