வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம்..?
வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகதெரியவருகிறது.
வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் அதனை விசாரணை செய்த விசாரணைக் குழு வடமாகாண விவசாய அமைச்சர்பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பதவி விலகவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்துஅமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டுள்ள போதும் அதற்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது பலர் சாட்சியமளிக்க தயாராகி வருவதாகவும் விசாரணைக் குழுவில்சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறும் வடமாகாண முதலமைச்சரிடம் கோரி வருவதாகதெரிகிறது.
இந்நிலையில், வடமாகாண சபை உறுப்பினர்கள் 19 பேர் வடக்கின் நான்குஅமைச்சர்களையும் உடனடியாக மாற்றுமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதற்கு அமைவாக வடக்கு அமைச்சர்களை மாற்றவேண்டிய நிலைக்கு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளில்முதலமைச்சர் இறங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம்..?
Reviewed by Author
on
June 12, 2017
Rating:

No comments:
Post a Comment