செல்பி எடுக்க சென்று இரு சகோதரர்கள் பலி - கொள்ளுபிட்டியில் நடந்த சோகம்
கொள்ளுப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள்.
செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களில் இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டி ஆகிய பகுதிக்கு இடையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷஷி மதுஷான் ரணவீர (24) மற்றும் அவரது சகோதரரான திலக் லக்ஷான் ரணவீர (12) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
ஷஷி மதுஷான் என்ற இளைஞன் சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கை வந்துள்ளார்.
அவரை அழைத்துச் செல்ல, அவரின் தாய், தந்தை மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தவர்கள் அநுராதபுரத்திலிருந்து வான் ஒன்றில் கொழும்புக்கு வந்துள்ளனர்.
மேலும், அநுராதபுரத்துக்குச் செல்வதற்கு முன்னர், கோல்பேஸுக்குச் சென்று, பின்னர் கொள்ளுப்பிட்டி கடற்கரை பகுதிக்குச் சென்றதாகவும், இதன்போது இந்த அனர்த்ததுக்குமுகங்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செல்பி எடுக்க சென்று இரு சகோதரர்கள் பலி - கொள்ளுபிட்டியில் நடந்த சோகம்
Reviewed by Author
on
June 12, 2017
Rating:

No comments:
Post a Comment