சிறுவர் தொழிலாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு....
குறைந்த சிறுவர் தொழிலாளர்களைக் கொண்ட 172 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இலங்கை 61 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு மற்றும் சிறார் தொடர்பான தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோரால் கைவிடப்படல், வறுமை, போசாக்கின்மை, கல்வி அறிவு போதாமை மற்றும் குறைந்த வயதில் திருமணம் செய்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறார்கள் தொழிற்படையில் இணையும் நிலை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக அளவில் 700 மில்லியன் சிறார்கள், தங்களது சிறுவர் பராயத்தை தொழில் காரணமாக முன்கூட்டியே இழந்து விடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவர் தொழிலாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு....
Reviewed by Author
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment