ஐ.நா செயலாளரின் தூதுவராக இலங்கையின் இளம் பெண்....
இலங்கையை சேர்ந்த ஜயத்மா விக்ரமநாயக்க என்ற இளம் பெண் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இளம் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான ஜயத்மா விக்ரமநாயக்க இளைஞர் அபிவிருத்திக்காக முக்கிய பங்களிப்பை செய்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான அவர், இலங்கை நாடாளுமன்ற செயலாளரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இளையோர் சம்பந்தமான பல திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ள அவர், 2013 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ஜயத்மா, தற்போது பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
ஐ.நா செயலாளரின் தூதுவராக இலங்கையின் இளம் பெண்....
Reviewed by Author
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment