வவுனியாவில் யானைத் தாக்கிய ஒருவர் பலி....
வவுனியா செட்டிக்குளம் மெனிக்கபாம் காட்டுப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமை சேர்ந்த முத்துக்கருப்பன் குமாரவேல் (வயது 55) என்பவர் தனது நண்பருடன் பாலப்பழம் பிடுங்குவதற்காக இன்று காலை 10.00 மணியளவில் மெனிக்பாம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கே பாலப்பழம் பிடுங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென வந்த யானையினால் முத்துக்கருப்பன் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவ்விடம் வந்த செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் பலியான முத்துக்கருப்பன் குமாரவேலின் சடலத்தினை மீட்டுள்ளனர்.
இந்த மரணம் தொடர்பான விசாரனையை மரண விசாரனை அதிகாரி அல்காஜ் ஐ.எஸ்.கமீட் மேற்கொண்டதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்து.
இச்சம்பவம் தொடர்பான மேலதகிக விசாரணையினை செட்டிக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியாவில் யானைத் தாக்கிய ஒருவர் பலி....
Reviewed by Author
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment