அண்மைய செய்திகள்

recent
-

நிலநடுக்க அபாயத்தில் 29 இந்திய நகரங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்.....


இந்திய தலைநகர் டெல்லி உள்பட நாட்டில் உள்ள 29 நகரங்கள் நிலநடுக்கங்கள் தாக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் அதிர்ச்சி தலவலை வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் இமாலய அடுக்கில் டெல்லி மற்றும் 9 மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்டதாக அறியப்படும் இமாலய அடுக்கில் உள்ள நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி, பாட்னா (பீகார்),

ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, கௌகாத்தி (அசாம்), கேங்டாக் (சிக்கிம்), ஷிம்லா (ஹிமாச்சலப் பிரதேசம்), டேராடூன் (உத்தராகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டிகர் (பஞ்சாப்) ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை நிலநடுக்க அபாயம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து இந்திய தரநிர்ணய ஆணையம் ஜோன் - 2 முதல் ஜோன் - 5 வரை 4 பகுதிகளாக பிரிக்கிறது.

நிலத்துக்கு அடியில் இருக்கும் தட்டுகளின் நகர்வு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவைகளும் பகுதிகளைப் பிரிக்கும் போது கணக்கில் கொள்ளப்படும்.

இதில் ஜோன் - 2 என்பது குறைந்த நிலநடுக்க அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஜோன் - 5 என்பது உச்சகட்ட நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது.

ஜோன் 4 மற்றும் ஜோன் 5 ஆகியவை கடுமையான அல்லது மிகவும் கடுமையான நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்படுகிறது.

மொத்த வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிகள், பீகாரின் வடக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள் போன்றவை ஜோன் - 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் ஒருசில பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் வடக்கு பகுதி, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தின் சிறிய பகுதி போன்றவை ஜோன் 4ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலநடுக்க அபாயத்தில் 29 இந்திய நகரங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்..... Reviewed by Author on July 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.