அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தொடர்: 600 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆனது இந்தியா...


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 600 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது

காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தெரிவு செய்தது.

அபாராமாக விளையாடிய இந்திய வீரர்கள் ஷிகர் தவான் 190 ஓட்டங்களும், புஜாரா 153 ஓட்டங்களும் குவித்தனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

133.1 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாளான இன்று 600 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தேனீர் இடைவெளியின் போது 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணாரட்ன ஆட்டமிழந்தார். தற்போது தரங்கா 24 ஓட்டங்களுடனும், குணத்திலகா 12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை தொடர்: 600 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆனது இந்தியா... Reviewed by Author on July 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.