மன்னார் செபஸ்தியார் பிரதான வீதியில் விபத்து.........ஒருவருக்கு காயம்.....
மன்னார் செபஸ்தியார் வீதியில் இன்று மாலை 5-30 மணியளவில் மோட்டார்சைக்கிலும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது துவிச்சக்கரவண்டியில் வந்த நபருக்கு கீழே விழுந்து தலையில் அடிபட்டு இரத்தம் வடியத்தொடங்கியது அங்கு கூடிய பொதுமக்கள் காயப்பட்ட நபரை மன்னார் பொதுவைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சுமார் 20நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்துக்கு விரைந்த றபிக் பொலிஸ்ஸார் மோட்டார் சைக்கிளின் திறப்பினை எடுத்துக்கொண்டு பொதுவைத்திய சாலைக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.
இவ்விபத்து நடந்தமைக்கு முக்கிய காரணமாக மக்கள் கூறிய காரணங்கள் இவை.....
- வீதி அகலமில்லாமை.....
- செபஸ்தியார் பிரதான வீதியில் அதிகமான கராஜ் (வாகனங்கள் திருத்தும் இடம் இருப்பதும்.....
- வீதியின் இருபகுதியிலும் வாகனங்கள் தரித்து நிறுத்தி இருந்தாலும் தான் இவ்விபத்து நடந்தமையே தவிர வேறு காரணம் இல்லை இப்பகுதியில் இதுபோன்று விபத்துக்கள் நடப்பது வழமையாகி விட்டது.
யார் இதை சீர் செய்யப்போகின்றார்.
மேலதிக தகவலுக்கு காத்திருக்கவும்...........
மன்னார் செபஸ்தியார் பிரதான வீதியில் விபத்து.........ஒருவருக்கு காயம்.....
Reviewed by Author
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment