இதை எதிர்பார்க்கவே இல்லை: அஸ்வின் நெகிழ்ச்சி இதை எதிர்பார்க்கவே இல்லை: அஸ்வின் நெகிழ்ச்சி
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றே சிறுவயது முதல் ஆசைப்பட்டதாகவும், இந்தநிலைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் 50ஆவது டெஸ்டில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கெதிராக காலேவில் நடந்த டெஸ்ட் போட்டி, இந்திய விரர் அஸ்வின் பங்கேற்கும் 50ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து அவருக்கு பிசிசிஐ தரப்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியின்போது பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அஸ்வின், மறக்கமுடியாத டெஸ்ட் போட்டி. என்றும் மகிழ்ச்சியுடன் நினைவில் இருக்கும். இந்த நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
இதை எதிர்பார்க்கவே இல்லை: அஸ்வின் நெகிழ்ச்சி இதை எதிர்பார்க்கவே இல்லை: அஸ்வின் நெகிழ்ச்சி
Reviewed by Author
on
July 30, 2017
Rating:

No comments:
Post a Comment