நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கடும் கண்டனம்.
யாழ்ப்பாணத்தில் வைத்து நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சியினை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு கோழைத்தனமான ஜனநாயகத்துக்கு விரோதமானதும், கண்டனத்துக்குரிய ஒரு செயலாகும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிபதி மா. இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து சட்ட விரோத செயல்களினால் தமிழ் மக்கள் அச்சமுற்று வாழ்ந்திருந்த காலப்பகுதியில் மிகத் துணிச்சலோடு நீதியை நிலைநாட்டி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்கி எமது மக்கள் பயம் நீங்கி வாழ வழியமைத்தவர் நீதிபதி மா.இளஞ்செழியன்.
இப்படியான சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் துணிச்சல் மிக்க நீதிபதிகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
நீதிபதி இளஞ்செழியான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நீதித்துறையின் மீது நாடாத்தப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.
இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு இதன் காரணகர்த்தாக்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதோடு இது போன்ற செயற்பாடுகள் இனிமேல் நடைபெறாதிருக்க என்னால் ஆன சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் இதனால் மனம் தளராது தமது உயரிய நடவடிக்களை தொடர்ந்தும் எமது மக்களுக்கு வழங்குவார் என நம்பிக்கை தெரிவிப்பதோடு அவருக்கு எமது பரிபூரண ஆதரவினை வழங்குகிறோம்.
மேலும் நீதிபதியை பாதுகாக்க முயற்சித்த இரு பொலிஸ் மெய்ப்பாது காவலர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
இப்படியான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தொடர்பில் மக்கள் விழிர்ப்புடனிருந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment