மன்னார் சாந்திபுரத்தில் காணிகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்....
மன்னார் மாவட்டத்தின் தற்போது தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்டுள்ளது. அரச வீட்டுத்திட்ட காணிகள் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள் தான் ஆம் புள்ளிகள் அடிப்படையில் வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவுகளின் போது முறைகேடுகள் நடைபெறுவதாக மக்கள் முரண்பட்டுக்கொள்கின்றனர்.
இவ்முரண்படுகளை தீர்ப்பதற்காக அதிகமான காணிபிடிக்கும் இடமாக கருதப்படுகின்ற சாந்திபுரத்தில் இன்று 04-07-2017 மாலை கிராமாலுவலகத்தில் காணிகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்கலந்துரையாடல் மன்னார் பிரதேச சபை செயலாளர் அவர்களின் தலைமையில் உப பிரதேச செயலாளர் காணி அலுவலர் கிராம அலுவலர் RDS-WRDS அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வீட்டுத்திட்ட காணிகள் தொடர்பான புள்ளிகள் வழங்கள் முறை மற்றும் அரசவிதிமுறைகள் என்பனவற்றில் பொதுமக்களுக்கும் பயணாளிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஒரு இரவு பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் இருந்ததும் இன்று அதிகாலை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது இங்கே குறிப்படத்தக்கது.
இது எதுவாக இருப்பினும் உண்மையில் தேவையுடையோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் வறியவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பது எல்லோரினதும் விருப்பம் ஆகும்
சட்டங்கள் மற்றும் விதிகள் ஏழைஎளியவர்களின் வாழ்வில் மட்டும் தான் செல்வாக்கு செலுத்துமா.....???
-VMK-
மன்னார் சாந்திபுரத்தில் காணிகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்....
Reviewed by Author
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment