அண்மைய செய்திகள்

recent
-

பொலிசார் கைதுசெய்தனர்; ரிசாத் மீட்டு சென்றார்! சாள்ஸ்"

மன்னார் கரிசல் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் நாட்டப்பட்ட எல்லை வேலிகளை பொலிசாரின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கி சேதப்படுத்தியவரை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற நிலையில் அமைச்சரின் வாகனம் பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபரை ஏற்றிச் சென்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமற்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டுகின்றார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
மன்னார் கரிசல் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் நாட்டப்பட்ட எல்லை வேலிகளை பொலிசாரின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கி சேதப்படுத்தியவரை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற நிலையில் அமைச்சரின் வாகனம் பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபரை ஏற்றிச் சென்றார்.இதன்போது சட்டத்தைக் காக்கா வேண்டிய பொலிசாரோ அமைச்சருக்கு சேவகம் செய்தனர்.
இவ்வாறு பொலிசார் சட்டத்தைப் பேனாது ஒரு தலைப்பட்சமாக அணைத்து விடயத்திலும் நடந்து கொண்டமையே இன்று இவ்விடயம் பூதாகரமாக உருவெடுத்து நிற்கின்றது. உதாரணமாக நீதிமன்ற பதிவாளர் பொலிசார் முன்னிலையில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் பதிவாளரும் ஆலயத்தரப்பும் வெளியேறிய நிலையில் அங்கே பொலிசாரின் பிரசன்னம் இருந்த்து. அந்தப் பொலிசாரின் கண்முன்பாகவே வேலிகள் நொருக்கப்பட்டன. அவ்வாறு இடம்பெற்றவேளையில் பொலிசார் தடுத்திருக்க முடியும் அல்லது அக் குற்றச் செயலை புரிந்தவர்களை கைது செய்யதிருக்க முடியும். மாறாக பொலிசார் படம் பிடிக்கின்றனர்.

இதற்கும் அப்பால் இரவு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திலேயே அமைச்சரின் வாகனம் பொலிஸ் நிலையம் சென்றது. மறுகணமே சந்தேக நபர் அமைச்சரின் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றார். இது தொடர்பில் கேட்டால் அவரை அடைத்து வைத்திருந்தால் பிரதேசத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என அமைச்சர் தெரிவித்தார் என பொறுப்பற்ற வித்த்திலே பொலிசார் பதிலளிக்கின்றனர்.

சட்டத்தை மீறியவனை வெளியில் விடுவதனால் சட்டத்தை மதித்தவர்கள் பாதிப்படைவதனைக் கருத்தில் கொள்ளாது பராபட்சமாக ஒரு தரப்பிற்காக செயல்பட்ட பொலிசார் மீதும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே உடனடியாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஊடாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். குற்றமிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொலிசார் வாக்குறுதியளித்துள்ளனர். அந்த வாக்குறுதியின் செயல்பாட்டிற்காக காத்து மக்கள் பொறுமை காத்துள்ளனர். என்றார்.-
பொலிசார் கைதுசெய்தனர்; ரிசாத் மீட்டு சென்றார்! சாள்ஸ்" Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.