உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சாலைகள்: முதல் இடத்தில் எந்த நாட்டின் சாலை தெரியுமா?
உலகின் பல்வேறு பகுதிகளில் ஆபத்தான சாலைகள் பல உள்ளன. இருந்த போதும் முதல் ஐந்து இடங்களில் உள்ள சாலைகள் மட்டுமே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஓல்டு யங்காஸ் சாலை(பொலிவியா)

உலக வளர்ச்சி வங்கி கடந்த 1995-ஆம் ஆண்டு பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து கோரோய்கோ நகரை இணைக்கும் ஓல்டு யங்காஸ் சாலையை உலகின் அபாயகரமான சாலை என்று அறிவித்தது. இந்த சாலையில் பயணிக்கும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
அட்லாண்டிக் சாலை(நார்வே)

நார்வேயில் உள்ள அட்லாண்டிக் சாலை ஐரோப்பிய கண்டத்தின் அபாயகரமான சாலை என்று கூறப்படுகிறது. அட்லாண்டிக் கடலோரத்தில் போடப்பட்டுள்ள இந்த சாலையில் காற்று பலமாக வீசும்போது பயணிக்க வேண்டாம் என்று நார்வே அரசு அறிவித்துள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள், காற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் டால்டன் நெடுஞ்சாலை(அலாஸ்கா)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ் அலாஸ்கா சாலை,உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சாலைகளில் ஒன்றாக அறியப்படும் சாலை என்று கூறப்படுகிறது. குளிர்காலங்களில் பனிபடர்ந்து காணப்படும் என்பதால் இந்த சாலையில் எந்தவொரு வாகன ஓட்டியும் தனியாக செல்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலை(ரஷ்யா)

உலகில் உள்ள நீளமான சாலைகளில் ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலையும் ஒன்று. சுமார் 10,094 கி.மீ.க்கும் அதிகமான நீளம் கொண்ட இந்தச் சாலையில் மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், பாலைவனங்கள் என நீளும் இந்த சாலை உலகின் அபாயகரமான சாலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை (அலாஸ்கா – அர்ஜெண்டினா)
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையான இந்த சாலை 48,000 கி.மீ. நீளம்கொண்டது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கவுதமாலா, அர்ஜெண்டினா என மொத்தம் 14 நாடுகள் வழியாக இந்த பாதை பயணிக்கிறது. அடர்ந்த காடுகள், பனிசூழ்ந்த மலைச்சிகரங்கள் என இந்த பாதை அபாயம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சாலைகள்: முதல் இடத்தில் எந்த நாட்டின் சாலை தெரியுமா?
Reviewed by Author
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment