விந்தனை அமைச்சராக நியமிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பினை டெலோ (TELO) முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளது
வட மாகாண சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) விற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சினை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு வழங்குவதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பினை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கடிதம் மூலம் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) தெரியப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கடந்த 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நிகழ்ந்த எமது கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் வடமாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவினை தங்களுக்கு அறிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
தங்கள் தலைமையிலான அமைச்சரவையில், எமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பா.டெனிஸ்வரன், அவரது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டியுள்ளதால், காலியாகும் அந்தப்பதவிக்கு எமது கட்சியின் சார்பில் விந்தன் கனகரட்ணம் நியமிக்கப்பட வேண்டும் என எமது அரசியல் குழுவின் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் எமது கட்சியின் சார்பில் 13.07.2017 ஆம் திகதி நான் அனுப்பியிருந்த கடிதத்திற்கான, அதே திகதியிடப்பட்ட உங்கள் பதில் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த வாறு பா.டெனிஸ்வரன் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுத்து அவருக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை அமைச்சரவைக்கு நியமனம் செய்யுமாறு நான் தங்களை வேண்டிக்கொள்கின்றேன். என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)வின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment