பிரித்தானியா அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...
பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் கடைசியாக கலந்து கொள்ளவிருக்கும் பொது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப் (96) பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவார் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.
அதாவது, செப்டம்பர் மாதம் முதல் எவ்விதமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில் பிலிப் தனது கடைசி பொது வாழ்க்கை நிகழ்ச்சியாக வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் கேப்டன் ஜெனரல் அணிவகுப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ராயல் கடற்படை Global Challenge-ன் தொண்டு நிறுவன நிகழ்ச்சியாகும். பக்கிங்காம் அரண்மனை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி தான் பிலிப் கலந்து கொள்ளும் கடைசி பொது நிகழ்ச்சியாகும்.
ஆனாலும், அவர் மகாராணியுடன் சில நிகழ்ச்சிகளில் பின்னர் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.
கடந்த 1953ல் இளரவரசர் George VI இறப்புக்கு பிறகு பிலிப் றொயல் கடற்படையின் கேப்டன் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
இந்த அணிவகுப்பின் மூலம் றொயல் கடற்படை தொண்டு பணிகளுக்காக நிதி வசூலிக்கப்படும்.
இளவரசர் பிலிப் இதுவரை 637 தடவை பொது வாழ்க்கை பயணமாக பல இடங்களுக்கு தனியாக சென்றுள்ளார்.
பொது மேடையில் 5493 தடவை உரையாற்றியுள்ள பிலிப் 14 புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிரித்தானியா அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...
Reviewed by Author
on
July 27, 2017
Rating:

No comments:
Post a Comment