26 வருடங்களுக்குப் பின் வென்ற தாய்ப் பாசம்! மகிழ்ச்சியில் அற்புதம்மாள்
பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்தமை தொடர்பில் தனக்கு உத்தியோகப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனது மகன் வெளியில் வந்தால் மட்டுமே நான் நம்புவேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியிருந்தது.
இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனது மகனுக்கு பரோல் கிடைக்கும், விடுதலை கிடைக்கும் என பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவை எவையும் நடைபெறவில்லை. தற்போது பரோல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எவ்வித தகவலும் எனக்கு வழங்கப்படவில்லை. உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை நான் நம்ப மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதன்போது பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் அற்புதம்மாளுக்கு தெரிவித்தது.
இந்த நிலையில், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அற்புதம்மாள். இது குறித்த தனக்கு மிக்க மகிழ்ச்சி என தெரிவித்ததுடன், மறுவார்த்தை பேச முடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு அடிக்கடி சுகயீனம் ஏற்படும் என தெரிவித்து, பரோல் கோரி அற்புதம்மாள் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்படி பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 வருடங்களுக்குப் பின் வென்ற தாய்ப் பாசம்! மகிழ்ச்சியில் அற்புதம்மாள்
Reviewed by Author
on
August 25, 2017
Rating:

No comments:
Post a Comment