சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 800-க்கும் அதிகமானோரின் நிலை இன்னும் தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளது.
பலியானவர்களில் 159 குழந்தைகளும் அடக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமானவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்ப்புப்பணிகளுக்காக சர்வதேச உதவிகளை அந்நாட்டின் அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.
சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
Reviewed by Author
on
August 25, 2017
Rating:

No comments:
Post a Comment