மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்.....
இங்கிலாந்தின் 5000 மீட்டர் ஓட்டப் பந்தய வீரரர் மோ பாரா. 34 வயதான இவர் ஒலிம்பிக்கில் நான்கு தங்க பதக்கங்கள் வென்று அசத்தியவர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்தான் உலகளவில் ஓடும் கடைசி ஓட்டம் என்று அறிவித்தார். அதில் தங்க பக்கம் வென்று முத்திரை பதித்தார்.
இந்நிலையில் சுரிச் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஓடுவதுடன் தனது ஓட்டம் முடிவடைந்து என்று அறிவித்தார். அதன்படி நேற்று தனது கடைசி ஓட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு போட்டியாக கருதப்படும் முக்தார் எட்ரிஸும் இதில் கலந்து கொண்டார்.
முக்தார் எட்ரிஸ், செலிமோ ஆகியோர் மோ பாராவிற்கு கடும் சவாலாக விளங்கினார்கள். என்றாலும் கடைசி சுற்றில் மோ பாரா சிறப்பாக ஓடி 13 நிமிடங்கள் 06.06 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.
செமிலா 13 நிமிடம் 06.09 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தையும், எட்ரிஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியால் வெற்றி முகத்தோடு மோ பாரா விடைபெற்றார்.
இந்த போட்டி குறித்து மோ பாரா கூறுகையில் ‘‘நான் வெற்றி பெற விரும்பினேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. இருந்தாலும் கடும் உழைப்பால் இந்த வெற்றி வந்தது. நான் ஓடும் ட்ரக், மக்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களை மிஸ் செய்ய இருக்கிறேன். ஏராளமான வருடங்கள் மிகவும் சந்தோசகமாக மைதானங்களில் ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், தற்போது என்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக இருக்க போகிறேன்’’ என்றார்.
மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்.....
Reviewed by Author
on
August 26, 2017
Rating:

No comments:
Post a Comment