அருள் மிகு கற்பகப்பிள்ளையார் ஆலயம் கள்ளியடி மன்னார்
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கைத்திருநாட்டில் மாதோட்டம் என்னும்
நகரிலே அமைந்துள்ள பாடல் பெற்ற திருக்கேதிச்சர பக்கத்தில் அமைந்துள்ள கள்ளியடி
கற்பக பிள்ளையார் நின்ற வெள்ளைநிற கருங்கல்லில் உருவான பிள்ளையார் கொம்புதூக்கி என்னும் கிராமத்திலே வாகை மரத்தின் கீழ் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து மக்கள் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளதாக அறிய முடிகின்றது.
அக்காலத்தில் தென்னிந்திய மாந்தை துறைமுகத்திற்கு வணிகம் செய்ய வந்தவர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்திருக்கலாம் என்று அறியக்கூடியதாக உள்ளது சோழர் ஆட்சிக்காலத்து மன்னர்களின் படையெடுப்பு காரணமாக மூன்று அடி உயரம் கொண்ட முகப்பொலிவு கொண்ட இவ்விக்கிரகம் இங்கு கொண்டு வந்திருக்க்லாம் என வரலாறு ஆதாராப்படுத்துகின்றது.
காலவோட்டத்தில் விக்கினங்கள் நீக்கும் விநாயகப்பெருமான் கொம்புதூக்கி எனும் இடத்தில் இருந்து கள்ளியடி கிராமத்தின் மத்தியில் உள்ள பூவரசு மரத்தின் கீழ் 1920 ஆண்டு மாசி மாதம் 02ம் திகதி திருவாள்ர் பொன்னம்பலம் பூசகர் மூலம் இங்கு கொண்டு வந்து வழிபாடு செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.
பூசகரின் வாரிசுகளாலும் உறவினர்களாலும் பாதுகாக்கப்ப்ட்டு பின்பு ஆலய பரிபாலனசபை உருவாக்கப்பட்டு அடியார்களின் அயராத உழைப்பினால் 1988 ஆண்டு ஆவணி சதுர்த்தியிலே ஆணைமுகத்தானுக்கு ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அடியார்க்கு அருள்பாலிக்கத்தொடங்கினார்
மக்களின் அயராத உழைப்பின் காரணமாக 2000ம் ஆண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் புனருத்தாருனம் செய்யப்பட்டு 11-09 -2013 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று வசந்த மண்டபம் மணிமண்டபம் அன்னதான மண்டபங்களோடு அழகாக காட்சிஅளிக்கும் கற்பகபிள்ளையார் ஆலயத்தில் வருடாவருடம் அலங்கார உற்சவவிழா 10நாட்கள் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டு வருகின்றது.
இது ஆலயத்தின் சுருக்க வரலாறு(1920-2017)தொகுப்பு -வை.கஜேந்திரன்-


அருள் மிகு கற்பகப்பிள்ளையார் ஆலயம் கள்ளியடி மன்னார்
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment