அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் பிரபலமடையும் யாழ். உணவுகள்!


கனடாவில் இடம்பெறவுள்ள திருவிழாவில் இலங்கை மற்றும் யாழ் தமிழ் உணவுகள் சமைக்கப்படவுள்ளது.

கனடாவின் Scarborough’s Markham பகுதியில் இந்த திருவிழா நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

தமிழ் விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்த தென்னிந்தியாவின் பிரபல சமையல் நிபுணர் தாமு கனடாவிற்கு இந்த வாரம் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பிரபல கேட்டரிங் வணிக உரிமையாளரான கந்தையா இராஜகுலசிங்கம் தாமுவுடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாவை நடத்தி வருகின்றார்.

எனது தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன், அதனால் தாமுவின் உதவியை நான் விரும்புகிறேன் என இராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய இந்த விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல உணவுகள் சமைக்கப்படவுள்ளன.

இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட பலவகையான உணவுகள் விழாவில் சமைக்கப்படவுள்ளது. அந்த பகுதியில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்படவுள்ளது.

கனடாவில் பிரபலமடையும் யாழ். உணவுகள்! Reviewed by Author on August 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.