எனது வாழ்வின் முக்கியமான நாள்! பேரறிவாளனின் பரோல் குறித்து சத்தியராஜ்
26 வருடங்களுக்குப் பிறகு நேற்று பேரறிவாளனை பரோலில் விடுவித்தமை தனக்கு மகிழ்ச்சி என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காணொளி ஒன்றை சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.
பேரறிவாளனை பரோலில் விடுவித்தமை எனக்கு மகிழ்ச்சி, அவரை முழுமையாக விடுவிக்க வேண்டும், இன்று எனது வாழ்வில் மிக முக்கியமான நாள்.
இவருடன் சேர்த்து 7 பேரும் முழுமையாக விடுதலையாக வேண்டும்.
பேரறிவாளனின் குடும்பத்தாருக்கு எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
படப்பிடிப்பிற்காக தற்போது வெளிநாடு சென்றுள்ளதால் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க உள்ளதாகவும் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
எனது வாழ்வின் முக்கியமான நாள்! பேரறிவாளனின் பரோல் குறித்து சத்தியராஜ்
Reviewed by Author
on
August 26, 2017
Rating:

No comments:
Post a Comment