உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை!
முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய கிரகணம் ஏற்பட்ட நேரத்தில் அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தை என்பதால், கிரகணத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் ‘எக்லிப்ஸ்' என்ற வார்த்தையையே குழந்தைக்கு பெயராக வைத்து பெற்றோர்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
குழந்தைக்கு நிறத்தை குறிக்கும் வார்த்தையான வயலட் என்ற பெயரை வைக்கவே முடிவெடுத்திருந்ததாவும், சூரிய கிரகணத்தின் போது பிறந்ததால் பெயரை மாற்ற நினைத்ததாகவும் ப்ரீடம் யுபங்ஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்தின் போது பிறந்து அதே வார்த்தையை பெயராக பெற்றுள்ளதால், செல்லக் குழந்தை எக்லிப்ஸ்சுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு உடை ஒன்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தியுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை!
Reviewed by Author
on
August 25, 2017
Rating:

No comments:
Post a Comment