தங்கமகன் உசேன் போல்ட்டை அதிர வைத்த ஜஸ்டின் கேட்லின்....
தடகள தங்க மகன் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தனது கேரியரின் கடைசி 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
லண்டனில் நடைபெற்றுவரும் IAAF உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட உசேன் போல்ட், 9.95 நொடிகளில் எல்லையை கடந்து சாதனை நிகழ்த்திய அதே மைதானத்தில் 100 மீற்றர் ஓட்டம் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அமெரிக்க தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.92 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அமெரிக்க வீரர் க்றிஸ்டியன் கோல்மேன் 9.94 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தனது இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த போல்ட் 9.95 நொடிகளில் எல்லையை கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இப்போட்டியோடு தாம் ஓய்வு பெறப்போவதாக உசேன் போல்ட் முன்னரே அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 12ம் திகதி நடைபெற இருக்கும் 4x100 தொடர் ஓட்டப்போட்டி தான் போல்ட்டின் கடைசி போட்டி என்றாலும், தனிநபர் பிரிவில் இதுதான் அவருக்கு கடைசிப்போட்டியாகும்.
தங்க மகன் உசேன் போல்டை அதிர வைத்த அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 2005ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பதும்,
தனது கேரியரில் இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடை செயப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கமகன் உசேன் போல்ட்டை அதிர வைத்த ஜஸ்டின் கேட்லின்....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment