நெய்மர் ஜெர்சி விற்பனையில் சாதனை படைத்த பி.எஸ்.ஜி....
பிரேசில் கால்பந்து வீரரான நெய்மரை ஒப்பந்தம் செய்த முதல் நாளிலேயே 10 ஆயிரம் நெய்மர் ஜெர்சியை விற்பனை செய்துள்ளது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்.
பார்சிலோனா அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தவர் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர். இந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி டிரான்ஸ்பர் தொகையாக பார்சிலோனாவிற்கு 222 மில்லியன் யூரோ கொடுத்துள்ளது. பி.எஸ்.ஜி. அணியுடன் ஐந்து வருடத்திற்கான ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
ஒப்பந்தமான உடனையே நெய்மருக்கு 10 எண் பொறித்த ஜெர்சி வழங்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் ஒரு வீரரின் பெயரில் வீரர் இடம்பிடித்துள்ள கிளப் மட்டுமே ஜெர்சி தயாரித்து வெளியிட முடியும்.
இந்த ஜெர்சிகளை விற்பனை செய்வதன் மூலம் கிளப்புகளுக்கு வருமானம் கிடைக்கும். அந்த வகையில் பி.எஸ்.ஜி. நெய்மர் பெயர் மற்றும் எண் பொறித்த ஜெர்சியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
முதல் நாளிலேயே இந்த கிளப் 10 ஆயிரம் ஜெர்சிகளை விற்றுள்ளது. விரைவில் ஒரு லட்சம் ஜெர்சிகளை விற்பனை செய்ய அந்த கிளப் முடிவு செய்துள்ளது.
ஒரு ஜெர்சிக்கு 100 யூரோ விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் யூரோ சம்பாதித்துள்ளது. இப்படியே சென்றால் மார்ச் மாதம் மத்தியில், நெய்மரின் டிரான்ஸ்பர் பீஸான 222 மில்லியன் யூரோவை பி.எஸ்.ஜி. அணி சம்பாதித்துவிடும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நெய்மர் ஜெர்சி விற்பனையில் சாதனை படைத்த பி.எஸ்.ஜி....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment