குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்: கொன்று குவிக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதகிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததைத் தொடர்ந்து 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அங்கு தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதலை நடத்திவருகின்றன.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் அல்-ஜோர் நகரில் ரஷ்ய படை வான் வழி தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்துள்ளது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள், ஆயுதகிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் போன்ற நிர்குலைந்து போனது. அத்தாக்குதலால் 200 ஐ.எஸ் தீவிரவாத்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இத்தகவலை ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்: கொன்று குவிக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்
Reviewed by Author
on
August 22, 2017
Rating:

No comments:
Post a Comment