தமிழன் தலையில் குல்லா! ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணைவு குறித்து கமல் ஹாசன் ஆவேசம்
தமிழகத்தின் ஆளும் அ.தி.மு.க கட்சியின் பிளவுபட்டிருந்த ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல் ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ள கமல் ஹாசன் ஆவேசமாக கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அண்மைக் காலமாகவே தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து டுவிட்டரில் கமல் ஹாசன் விமர்சித்து வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழன் தலையில் கோமாளிக்குல்லா என்று கமல் ஹாசன் டுவிட்டரில் ஆவேச கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா. என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழன் தலையில் குல்லா! ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணைவு குறித்து கமல் ஹாசன் ஆவேசம்
Reviewed by Author
on
August 22, 2017
Rating:

No comments:
Post a Comment