கனெக்டிகட் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா கால்இறுதிக்கு தகுதி
கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) கனடா வீராங்கனை பவுச்சர்டை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
கனெக்டிகட் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா கால்இறுதிக்கு தகுதி
போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா பந்தை திருப்புகிறார்.
நியூஹெவன் :
கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூஹெவன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு மூலம் பங்கேற்ற கனடா வீராங்கனை பவுச்சர்டை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 45 நிமிடமே தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் சீன வீராங்கனை பெங் ஹூய் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் மிர்ஜனா லூசிச் பரோனியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ராட்வன்ஸ்கா-பெங் ஹூய் மோதுகிறார்கள். மற்ற ஆட்டங்களில் டாரியா காவ்ரிலோவா (ஆஸ்திரேலியா), எலிசெ பெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
கனெக்டிகட் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா கால்இறுதிக்கு தகுதி
Reviewed by Author
on
August 24, 2017
Rating:

No comments:
Post a Comment