பாகிஸ்தானில் கனமழை: இரண்டு நாள்களில் 24 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த திங்கள் கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் பாகிஸ்தானில் உள்ள சித் மாகாணத்தின் தலைநகரான கராச்சி நகரில் மட்டும் 24 பேர் பலியாகினர். அவர்கள் மின்சாரம் தாக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும் மற்றும் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இரண்டு நாட்களாக இருட்டில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாத நிலையில், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கராச்சி மற்றும் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளிலும் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் கனமழை: இரண்டு நாள்களில் 24 பேர் பலி
Reviewed by Author
on
August 24, 2017
Rating:

No comments:
Post a Comment