புலிட்சர் விருது பெற்ற நாடகக் கலைஞர் சாம் ஷேபார்ட் மரணம்
அமெரிக்காவைச் சேர்ந்த புலிட்சர் விருது வென்ற புகழ்பெற்ற நாடகம் மற்றும் சினிமா கலைஞர் சாம் ஷோபார்ட் (73) உடல்நலக்குறைவால் காலமானார்.
புலிட்சர் விருது பெற்ற நாடகக் கலைஞர் சாம் ஷேபார்ட் மரணம்
நியூயார்க்:
அமெரிக்காவைச் சேர்ந்த புலிட்சர் விருது வென்ற புகழ்பெற்ற நாடகம் மற்றும் சினிமா கலைஞர் சாம் ஷோபார்ட் (73) உடல்நலக்குறைவால் காலமானார்.
அமெரிக்காவின் இல்லினியஸ் மாகாணத்தில் 1943-ம் ஆண்டு பிறந்தவரான சாம் ஷேபார்ட் சிறந்த நாடக கலைஞராக இருந்தவர். நடிகராக, இயக்குநராக, கதையாசிரியராக மற்றும் வசன கர்தாவாக என பண்முகத்தன்மை கொண்டிருந்த ஷேபார்ட் 1979-ம் ஆண்டு தன்னுடைய நாடகங்களுக்காக புலிட்சர் விருதை வென்றுள்ளார்.
மேலும், ஆஸ்கார் விருதுக்கும் ஒரு முறை சாம் ஷோபார்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தற்போது, உடல்நலம் குன்றிய நிலையில் கெண்டகி மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த சாம் ஷோபார்ட் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புலிட்சர் விருது பெற்ற நாடகக் கலைஞர் சாம் ஷேபார்ட் மரணம்
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment