மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு அன்பான வேண்டுகோள்….
இரண்டாவது தடவையாகவும் ஞாபகப்படுத்துகின்றோம் அன்பாக….
மன்னார் மாவட்டத்தில் தற்போதுதான் வீதி அபிவிருத்திகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது மகிழ்ச்சியான விடையம் தான் ஆனால் அந்த மகிழ்ச்சி நிலையானதாக இல்லையே காரணம் என்ன வென்றால் எந்த அபிவிருத்தி திட்டங்களும் முழுமையானதாக முடிவதில்லையே….ஏன்….???
நாம் இங்கு தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புவது என்னவென்றால் மன்னாரில் உள்ள பெரும்பாலான பிரதான வீதிகள் தீருத்தும் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் பாதசாரிகளுக்கான கடவைகள் குறியீட்டுப்பல்கைகள் வெள்ளைக்கோடு அல்லது மஞ்சள் கோடுகள் அடிக்கப்படாமல் உள்ளது விரைவாக இந்தப்பணிகளை செய்து மக்களினதும் பாதசாரிகள் வாகனஓட்டுனர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மன்னாரில் தற்போது விபத்துக்கள் அதிகமாக இருப்பது இதுபோன்ற சிலவிடையங்களும் தாக்கம் செலுத்துகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் விபத்துக்கள் பிரச்சினைகள் பெரிதாவதற்கு முன் விரைந்து செயல்படுவது சாலச்சிறந்தது.
தங்களின் சேவையானது மக்களுக்கு தேவையாகவுள்ளது உணர்ந்தால் நன்மை யாவருக்கும்….
-மன்னார்விழி-
மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு அன்பான வேண்டுகோள்….
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment