உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக சாதனையுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தென் கொரிய வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், தென் கொரியாவின் சங் ஜி ஹைன் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டில் சிறப்பாக விளையாடி 21-19 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றிய சாய்னா, இரண்டாவது செட்டிலும் அதிரடி ஷாட்களை விளையாடி 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் காலிறுதிப்போட்டிக்கு சாய்னா முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கணை என்ற பெயரை சாய்னா நேவால் பெற்றுள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவின் முன்னணி வீராங்கணையான பி.வி.சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக சாதனையுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்
Reviewed by Author
on
August 25, 2017
Rating:

No comments:
Post a Comment