இந்தியாவின் 2குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம்: 5-9-1888
இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம்: 5-9-1888
இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவரும், முதல் குடியரசு துணைத்தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்றைய தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் திருத்தணியில் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஏழை தெலுங்கு நியோகி பிராமண குடும்பத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். உயர்கல்வியை வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் தொடங்கிய அவர், அங்கிருந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாறினார்.
தத்துவவியல் முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். பல்வேறு தத்துவங்களை கற்று அறிமுகப்படுத்தினார். தத்துவ மேதையான அவர் எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்றார். அவருக்கு 1954ஆம் ஆண்டு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பின் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார். முன்னதாக 1952-62 காலகட்டத்தில் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
ஆசிரியராக தன் பணியைத் தொடங்கி நாடு போற்றும் தலைவராக விளங்கிய ராதாகிருஷ்ணன், தனது 86வது வயதில், அதாவது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் காலமானார்.
இந்தியாவின் 2குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம்: 5-9-1888
Reviewed by Author
on
September 05, 2017
Rating:

No comments:
Post a Comment