வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945
பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் 1945-ம் ஆண்டு செப்.2-ந்தேதி விடுதலை பெற்றது.
வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945
வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும். உலகில் மக்கள் தொகையில் 13-வது இடத்தையும் வகிக்கிறது. இதன் தலைநகரம் ஹனோய் ஆகும். ஹோ சி மின் நகரம் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் 1945-ம் ஆண்டு செப்.2-ந்தேதி விடுதலை பெற்றது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய் சேர்ந்தன.
* 1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் ஒரு லட்சம் பேரையும் கைது செய்தனர்.
* 1885 - வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.
* 1898 - பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.
* 1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.
* 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி ஜெருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் மிசூரி என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
* 1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
* 1946 - பிரித்தானிய இந்தியாவில் ஜவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945
Reviewed by Author
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment