இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் (செப்.22, 1995)
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் இந்த இடத்தில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. இதில் 25 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இங்கு 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியன்று பகல் 12.30 மணிக்கு மதிய நேர இடைவேளைக்கு மணியடித்தபோது பிள்ளைகள் வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணியளவில் இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் இந்த இடத்தில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. ஏதும் அறியாத மாணவர்கள் மரத்தின் கீழே சென்று பதுங்கிக் கொண்டனர். அப்போது, மரத்துக் கீழே பதுங்கியிருந்த 25 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 39 பேர் பலியாயினர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் 6 வயது குழந்தை முதல் 16 வயதுடைய சிறுவன் வரை அடங்குவர்.
இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் (செப்.22, 1995)
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment