சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்
ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இன்று கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
குல்தீப் யாதவின் ஹாட்ரிக் விக்கெட்டால் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் இருந்த தென்னாப்ரிக்காவை விட 19 புள்ளிகள் இந்தியா பின் தங்கியிருந்த நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் இந்தியா தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்
Reviewed by Author
on
September 22, 2017
Rating:
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment