அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் சிலிக் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில், விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் மக்டலெனா ரைபரிகோவாவை (ஸ்லோவெகியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் மரியா சக்காரி (கிரீஸ்) பந்தாடியதுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றையும் உறுதி செய்தனர்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப்போட்டியில் முன்னணி வீரரான குரோஸியாவின் மரின் சிலிக், அர்ஜெண்டினாவின் தியாகோ ஸ்வார்ட்மேனிடம் 6-4, 5-7, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்று இத்தொடரில் இருந்து வெளியேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி Reviewed by Author on September 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.