பூமிக்கு அருகில் பயணிக்கும் வால் நட்சத்திரம் - பூமியை நெருக்கும் ஆபத்து....
மூன்று மைல்கள் நீளம் கொண்ட பெரிய வால் நட்சத்திரம் ஒன்று இன்று பூமிக்கு அருகில் பயணிக்கும் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளோரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம் பூமியில் இருந்து 4.4 மில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணிக்கும் எனவும் இலங்கையின் நேரப்படி இன்று மாலை 5.35 அளவில் இது நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வெளியின் தூர கணக்கின்படி இதனை பூமிக்கு அருகிலான தூரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரம் 1890 ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் பயணித்துள்ளதுடன் மீண்டும் இதே போன்ற நிகழ்வு 2500 வருடங்களின் பின்னர் நிகழும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு பூமியில் இருந்து பார்க்கும் அளவில் பயணித்த எரிகல் ஒன்று மீண்டும் தென்பட்டதை அடுத்து நாசா நிறுவனம் அது குறித்து விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி இந்த எரிகல் பூமியில் இருந்து 4 ஆயிரத்து 200 மைல் தொலைவில் பயணிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த எரிகல் பூமியில் மோதும் ஆபத்து இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது பூமியில் மோதியிருந்தால், மிகப் பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தென்பட்ட இந்த எரிகல் காணாமல் போனது. இந்த எரிகல் 10 முதல் 30 மீற்றர் சுற்றளவை கொண்டது. நாசா இதற்கு 2012TC4 எனப் பெயரிட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இவ்வாறான எரிகல் விழுந்ததன் காரணமாக ரஷ்யாவின் Chelyabinsk என்ற பிரதேசத்தில் ஆயிரத்து 500 பேர் விபத்துக்கு உள்ளாகினர். 7 ஆயிரம் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அந்த எரிகல்லின் சுற்றளவு 18மீற்றராகும்.
2012TC4 எரிக்கல் பூமியில் மோதினால், இதனை விட கடுமையான அழிவு ஏற்படக் கூடும் என நாசா சுட்டிக்காட்டியுள்ளது.
பூமிக்கு அருகில் பயணிக்கும் வால் நட்சத்திரம் - பூமியை நெருக்கும் ஆபத்து....
Reviewed by Author
on
September 01, 2017
Rating:

No comments:
Post a Comment