"அமெரிக்காவைச் சாம்பலாக்குவோம்" பகிரங்க சவால்விடும் வடகொரியா!
வடகொரியா, தொடர் ஏவுகணைச் சோதனை செய்துவரும் வேளையில், ’அமெரிக்கா மீதும் அணு ஆயுதச் சோதனை நடத்தி சாம்பலாக்குவோம்’ என அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க சவால் விடுத்துள்ளது.
தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா இன்று மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அமெரிக்காவைச் சாம்பலாக்குவோம்" பகிரங்க சவால்விடும் வடகொரியா!
Reviewed by Author
on
September 15, 2017
Rating:

No comments:
Post a Comment