அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்.....


மன்னார் - முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஏற்கனவே உறுதியளித்த நிலையிலும், தற்போது வரை காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன.

இந்த பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை கடற்படையினர் விடுவிப்பதாக உறுதியளித்து அடம்பன்குளமும் அதனை அண்டிய விவசாய நிலங்களும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். என மன்னார் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்ரர் அடிகளார் தலைமயிலான மதகுருமார் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இதன் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு வருகை தந்து கடற்படையோடு கலந்தாலோசித்து காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் இரணைதீவு விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை பூநகரி பிரதான கடற்படைத்தளத்தில் மேற்கொண்டிருந்தனர்.

இரணைதீவு காணி விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலையடுத்து மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் - முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்..... Reviewed by Author on September 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.