அண்மைய செய்திகள்

recent
-

மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிறப்பு , இறப்பு , விவாகத்திற்கான புதிய பதிவாளர் நியமனம்-Photo


மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிறப்பு , இறப்பு , விவாகத்திற்கான புதிய பதிவாளராக மரியாதைக்குரிய திருமதி. பிறேமிலா சத்தியலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று 20.9.2017 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து அவரின் வாழ்த்தினையும் ஆசியையும் பெற்று வைபவரீதியாக பதவியை பொறுப்பெடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்திற்கான மேலதிக மாவட்ட பதிவாளர் மரியாதைக்குரிய திரு. J.K.அமர்நாத் அவர்களும் கலந்துகொண்டார்.இவர் 14/9/2017 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொழும்பு அலரி மாளிகையில் மாண்புமிகு பிரதமர் றணில் விக்கிரமசிங்க அவர்களினால் அரச நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார் என்பது மகிழ்சியளிக்கும் செய்தியாகும்.இவர் மாந்தைமேற்கு அடம்பன் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவராகவும்
மன்/ அடம்பன் M.M.V பாடசாலையின் பழைய மாணவியும் ஆவார்.இவர் அடம்பனைச் சேர்ந்த மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1988 ஆம் ஆண்டு முதல் 20 / 9 / 2017 ஆம் திகதி வரை பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறப்பு , இறப்பு , விவாக முன்னாள் பதிவாளர் மரியாதைக்குரிய செபஸ்தியாம்பிள்ளை செபமாலை இராஜசிங்கம் அவர்களின் மூத்த மகளும் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.S.R.யதீஸ் அவர்களினதும் சகோதரியும் ஆவார்.
மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிறப்பு , இறப்பு , விவாகத்திற்கான புதிய பதிவாளர் நியமனம்-Photo Reviewed by NEWMANNAR on September 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.