பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் - அவரது தாய் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம்
பேரறிவாளனின் பரோலை அவரின் தந்தை மற்றும் சகோதரியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் 30 நாள் நீட்டிக்க வேண்டும் என அவரின் தாய் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பரோல் செப்டம்பர் 24-ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், அவரது பரோலை நீட்டிக்க கோரி அவரது தாய் அற்புதம்மாள் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'எனது கணவர் மற்றும் மகள் உடல்நலக் குறைவால் அவதியுற்று வருகின்றனர். அவர்கள் அருகில் பேரறிவாளன் இருந்தால் மிகவும் ஆறுதலாக இருக்கும். அதனால் அவனது பரோலை இன்னும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி அவரது அப்பா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டது.
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் - அவரது தாய் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment