தீபாவளிக்கு ரூ.135 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
தீபாவளி பண்டிகையான நேற்று ரூ.135 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த தீபாவளியோடு ஒப்பிடுகையில் மதுபான விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் சுமார் 6 ஆயிரம் உள்ளது.
தினசரி குடிக்கும் குடி மகன்கள் ஏராளம் பேர் உள்ளனர். மது விருந்து என்பது மேலை நாட்டு கலாச்சாரமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நம் நாட்டிலும் பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள், விழாக்கள், பண்டிகைகள் என எதற்கெடுத்தாலும் மது விருந்து கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
மது விற்பனை மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இதனால் அரசும் மது விற்பனைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவளி தினத்தில் மது விற்பனை குறைந்து உள்ளது.
நேற்று முன்தினம் டாஸ்மாக் மூலம் ரூ.97 கோடி மது விற்பனை நடைபெற்றது. தீபாவளி பண்டிகையான நேற்று ரூ.135 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கடந்த தீபாவளியோடு ஒப்பிடுகையில் மதுபான விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி இருந்தது.
சமீபத்தில் மதுபானங்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியது. விற்பனை குறைவுக்கு விலை உயர்வு காரணமாக கருதப்படுகிறது.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டதாலும் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு ரூ.135 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment