சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு இளைஞன் - இறுதிக்கிரியைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்
சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இhttps://www.blogger.com/blogger.g?blogID=6366069222780581421#editor/target=post;postID=7314711536797716209;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=1;src=linkளைஞனின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, அவரது உறவினர்கள் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
இன்றையதினம் சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை சுவிட்சர்லாந்து சென்றதும் கரனின் இறுதிக்கிரியைகளை உடனடியாக நடத்தப் போவதாக கரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுவிஸ் வாழ் இலங்கை உறவுகளும் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமக்கான உதவிகளையும் வழங்க வேண்டும்.
அத்துடன் இந்த கொலைக்கான நீதியும் தமக்கு கிடைக்க உதவி புரிய வேண்டும் எனவும் கரனின் உறவினர்கள் சுவிஸ் வாழ் இலங்கையர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு இளைஞன் - இறுதிக்கிரியைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment