விஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் 2 ஆவது தடவையாக விசாரனைக்கு அழைப்பு-(படம்) (17-10-2017)
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை எதிர் வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரனைக்கு வருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் ,வவுனியா பயங்கரவாத விசாரனைப்பிரிவினூடாக 2 ஆவது தடவையாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த 2 ஆம் திகதி விசாரனைக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக விசாரனைக்கு வர முடியாது என கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையிலே மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை மீண்டும் எதிர் வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் விசாரனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
எதிர் வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் விசாரனைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-குறித்த அழைப்பானை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரனைப்பிரிவினுடாக இன்று(17) செவ்வாய்க்கிழமை மதியம் எனக்கு கிடைத்துள்ளது.என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

விஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் 2 ஆவது தடவையாக விசாரனைக்கு அழைப்பு-(படம்) (17-10-2017)
Reviewed by Author
on
October 17, 2017
Rating:

No comments:
Post a Comment