மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!
2017ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படவுள்ளது.</p><p>மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.மூலக் கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காகவே இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வைத்து இந்த விடயம் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப, பருவநிலை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடு செய்யவும், மனிதர்கள், விலங்கினம், தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்வதற்கு தேவையான புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment