மன்னாரில் குப்பைக்குள் இருந்த குண்டு வெடிப்பு.....
"வெடிகுண்டுச் சிதறல் காயங்களுடன் பொலிஸ் அலுவலர் ஒருவர் மன்னார் மருத்துவமனையில் நேற்றுச் சேர்க்கப்பட்டார். குண்டு வெடித்ததால் அவர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
மன்னார் – தலைமன்னார் சாலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்திலேயே அவர் காயமடைந்தார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அந்த இடத்தில் வீதியோரம் குவிக்கப்பட்டிருந்த குப்பை எரிந்துகொண்டிருந்தது. அதற்குள் இருந்த ஏதோவொரு வெடிப்பொருளே வெடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் குப்பைக்குள் இருந்த குண்டு வெடிப்பு.....
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment